இந்திய கிரிக்கெட் அணி இன்று நியூசிலாந்து செல்கிறது!

விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்தது. அடுத்து நியூசிலாந்துடன் இந்தியா விளையாடுகிறது. ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் ஆடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து புறப்படுகிறது.

சிங்கப்பூர் வழியாக ஆக்லாந்துக்கு வீரர்கள் சென்று அடைகிறார்கள். இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. பிப்ரவரி 2-ந்தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 5-ந்தேதி தேதி முதல் 11-ந்தேதி வரையும், டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 21-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரையும் நடக்கிறது.

நியூசிலாந்து பயணத்துக்கு 20 ஓவர் போட்டிக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணி விவரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நியூசிலாந்து பயணத்தில் இடம் பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *