இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை பிபா ரத்து செய்தது

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.

மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.