இந்தியில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது.

ஒத்த செருப்பு படத்தை, இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும் பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிக்க அபிஷேக் பச்சன் இந்த படத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இப்படத்தை பார்த்திபன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.