இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான  20 ஓவர் போட்டித் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 18 மற்றும் 20ந் தேதிகளில் நடைபெறும் கடைசி இரண்டு 20 ஓவர் போட்டிகளை நேரடியாக பார்க்க ரசிகர்களை அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.