இந்தியா, ஆஸ்திரேலியா தொடர் எங்களுக்கு முக்கியமானது – ஜோ ரூட் கருத்து

இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஷஸ் தொடருக்குப்பின் மிகப்பெரிய தொடராக இது கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணி 2021 கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர், ஆஸ்திரேலிய கண்டிசன் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மிகமிக உதவிகரமாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதுவதை பார்ப்பது சிறப்பானதாக இருக்கும், ஆனால், ஆஸ்திரேலியா கண்டிசனில் புது வீரர்களுடன் களம் இறங்கும் இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும். இந்தத் தொடரில் இருந்து அனைத்து தரவுகளையும் எங்களால் பெற முடியும். இது முக்கியமானதாக இருக்கும்.

இதனால் நாங்கள் இலங்கை மற்றும் இந்தியா தொடர் மீது கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தம் இல்லை’’ என்றார்.