இந்தியாவில் புதிதாக 22,431 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,431 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது  இந்தியாவில் 2,44,198  பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 3,38,94,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,32,00,258 பேர் குணமடைந்துள்ளனர். 4,49,856  பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,09,525 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 92,63,68,608 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.