இந்தியாவில் புதிதாக 14,623 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,623 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   19,446 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3,41,08,996 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,34,78,247 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4,52,651 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 1,78,098 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 41,36,142 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 99,12,82,283 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.