Tamilசெய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் சென்றது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,03,16,897 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 907 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 56,994 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.