இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் மொத்தம் 1.90 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 93322 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67655 ஆக உயர்ந்துள்ளது. 2286 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 22333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 19844 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 473 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 16779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 33
ஆந்திர பிரதேசம் – 3679
அருணாச்சல பிரதேசம் – 4
அசாம் – 1272
பீகார் – 3815
சண்டிகர் – 293
சத்தீஸ்கர் – 498
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 2
டெல்லி – 19844
கோவா – 70
குஜராத் – 16779
அரியானா – 2091
இமாச்சல பிரதேசம் – 331
ஜம்மு – காஷ்மீர்- 2446
ஜார்க்கண்ட் – 610
கர்நாடகா – 3221
கேரளா – 1269
லடாக் – 74
மத்திய பிரதேசம் – 8089
மகாராஷ்டிரா – 67655
மணிப்பூர் – 71
மேகாலயா – 27
மீசோரம் – 1
நாகலாந்து – 43
ஒடிசா – 1948
புதுச்சேரி – 70
பஞ்சாப் – 2263
ராஜஸ்தான் – 8831
சிக்கிம் – 1
தமிழ்நாடு – 22333
தெலுங்கானா – 2698
திரிபுரா – 313
உத்தரகாண்ட் – 907
உத்தர பிரதேசம் – 7823
மேற்கு வங்காளம் – 5501

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-5630

மொத்தம் – 190535.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *