இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு ஒரு நாளைக்கு இரண்டு முறை அறிவித்து வருகிறது.

அதன்படி இன்று காலை மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 776-ல் இருந்து 39980 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1223-ல் இருந்து 1301 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 18-ல் இருந்து 10 ஆயிரத்து 633 ஆக உயர்ந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *