இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – காலியிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  நேற்று  நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில்  டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்

இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற நேர் செட் கணக்கில்  ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம்  ஆயிரமாவது மாஸ்டர் போட்டி ஒற்றையர் பிரிவில் 16வது முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.