இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் – அரையிறுதியில் நடால், அல்காரஸ் மோதல்

 

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-0) 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக்
கைர்ஜியோஸ்சை போராடி வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 46 நிமிடம் நீடித்தது.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை தோற்கடித்தார்.

இதையடுத்து அரை இறுதி போட்டியில் நடால்-அல்காரஸ் மோதுகின்றனர்.