இசையமைப்பாளர் ஜிப்ரானின் வீரவணக்க பாடல் – முதலமைச்சர் வெளியிட்டார்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.