இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாதம் இந்தியா வருகிறார்

கிளாஸ்கோவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பருவநிலை உச்சிமாநாட்டின்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது.

இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும் 22-ம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இரு நாட்டு பிரதமர்களிடையே ஓர் தனிப்பட்ட சந்திப்பு குறித்து தொலைபேசியில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது இருவரும் ஒப்புக்கொண்டனர்.