இங்கிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி!

இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.