ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி – இலங்கை வெற்றி

இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் கேரி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். குசால் மெண்டிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.