ஆஸ்கார் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் “நாட்டு…நாட்டு…” பாடல்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் 2023-ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பிடித்தது. இந்நிலையில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. இதனுடன் மேலும் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.