ஆவில் பால் விற்பனை அதிகரிப்பு – அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது தினமு‌ம் 29 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.