அம்பேத்கர் நினைவு தினம் – ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.