அம்பேத்கரின் 64 வது நினைவு தினம் – மு.க.ஸ்டாலின் மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். அம்பேத்கரின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். டாக்டர் அம்பேத்கர் குறித்த நினைவுகளை அவரது புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் இல்லத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்து, அம்பேத்கரை நினைவுகூர்ந்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்ட பேஸ்புக் பதிவு வருமாறு:-

இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன்! இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்! ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான ஒளிவிளக்கு! எந்நாளும் எல்லோருக்குமான வழிகாட்டி! அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று!

அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் தடம்மாறாது நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்! சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.