அமைச்சர் மா.சுப்பிரமணியம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

ஒமைக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒரே ஆயுதம் பூஸ்டர் டோஸ்தான் என கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றின் தன்மை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் நேற்று முன்களப்பணியாளர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.