அமெரிக்க படைகள் வெளியேற காலக்கெடு நீட்டிக்க முடியாது – தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியதாவது:

அமெரிக்கப் படைகள் வெளியேற கெடுவை நீட்டிக்க மாட்டோம். ஆகஸ்டு 31-ம் தேதிக்குள், அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை முடிக்க வேண்டும்.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும், தலிபான்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா என்று எனக்கு தெரியாது. நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. விமான நிலையத்தில்தான் குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார்.