அப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது. இவருடைய தந்தை சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

அதில், “அப்பா நானும் ஜித்துவும் இன்று எங்கள் வாழ்க்கையில், நாங்கள் செய்வது போல் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. உங்கள் பிறந்தநாள் அன்று இரண்டு விருப்பங்கள் எனக்கு உண்டு. முதலில் நீங்கள் இப்போது எந்த வடிவத்தில் இருந்தாலும், நான், அம்மா மற்றும் ஜித்து நீங்கள் சிறந்த மகிழ்ச்சி, பேரின்பம், அமைதி மற்றும் அனைத்து விருப்பங்கள் பெற்று வாழ விரும்புகிறேன்.

இந்த உலகத்தில் நீங்கள் வேறு எந்த உருவத்தில் இருந்தாலும் உங்களை அடையாளம் காண எங்களுக்கு வழிகாட்டவேண்டும் என்பது இரண்டாவது விருப்பம். ஏனென்றால் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். லிட்டில் அமலா உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா..!” என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.