அப்துல் கலாமின் வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்

மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது’ என கூறி உள்ளார்.

மேலும் டாக்டர் அப்துல் கலாம் தொடர்பான வீடியோ தொகுப்பையும் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.