அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, 24 மணி நேரம் செயல்படும் உதவி மையம், தீவிர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நேற்று கடிதம் எழுதியது.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது பண்டிகை கால கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட வாய்ப்புள்ளது.