அத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

வருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மறும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தாசினம் செய்தார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தீடீரென நயன்தாரா கோவிலுக்குள் வந்ததால் சுற்றி இருந்த பொது மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே நடிகை ரஜினிகாந்த தனது மனைவி லதா மற்றும் குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *