அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ படத்தின் டிரைலரை வெளியிட்ட மூன்று பிரபலங்கள்

‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கபடி களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலரை இயக்குனர்கள் வெங்கட்பிரபு, பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.