அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில்,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை துணைவேந்தர் சூரப்பா திரும்பப் பெற கோரி மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீரப்பன் என்ற பெயரில் சூரப்பாவுக்கு வந்த கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.