அஜித், ஷாலினி ரொமாண்டிக் – வைரலாகும் புதிய புகைப்படம்

 

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில், ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாம்லி அவருடைய சமூக வலைத்தளத்தில் ஷாலினி மற்றும் அஜித் இருவரும் காதல் அரவணைப்பில் இருக்கும் புகைப்படத்தைப்
பகிர்ந்துள்ளார். அதில் “23 வருட காதல்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.