tamil movie
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதளத்தில் கேமராவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் 'எஸ்கே21' படப்பிடிப்பு தொடங்கியதாக கமெண்ட் செய்து வருகின்றனர். Read More
கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை டோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. Read More
கவனம் ஈர்க்கும் தண்டட்டி டிரைலர்
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதையடுத்து 'தண்டட்டி' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More