X

ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் செங்கோல் – ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம்

புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை வைக்க ஆரம்பத்தில் இருந்தே எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், இன்று கூடிய முதல் மாநிலங்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பாராளுமன்றத்தில் செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர்.

பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தியது. செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதியின் ஆலோசனை நல்லது. சமாஜ்வாதி எம்.பி. கூறியது நல்ல ஆலோசனையே என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

இது ஜனநாயக நாடு, செங்கோலை அகற்ற வேண்டும். செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மிசா பார்தி கூறி உள்ளார். பாராளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் செங்கோல் என்று பாராளுமன்றத்தில் திரவுபதி முர்மு கூறினார்.

Categories: Chennai News News