Chennai 360

AXIS வங்கியின் இளம் வங்கியர் திட்டத்தின் பிப்ரவரி – 2022 பேட்ச் சேர்க்கை தொடங்குகிறது

பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு வங்கித் துறையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள், முதல் மணியில் இருந்தே திறம்பட செயலாற்றும் செயல் திறன் பயிற்சி,
04-01-2022

மணிபால் அகாடமி ஆப் BFSI ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ‘ஆக்சிஸ் பேங்கின் யங் பேங்கர்ஸ் (இளம் வங்கியர்) ப்ரோக்ராம்’-மிற்கான பிப்ரவரி 2022 பேட்ச்சுக்கான சேர்க்கை தொடங்குகிறது.

2012 ல் தொடங்கிய இந்த திட்டம் இந்தியாவில் இளம் வங்கியராக வங்கிப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களைத் தயார் படுத்தும் நோக்கத்துடன் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் ஆக்சிஸ் வங்கியில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 9000 க்கும் மேலானவர்களின் வெற்றி கதைகளுடன் BFSI மணிப்பால் அகாடமியின் அனுபவமிக்க ஆசிரியர்களால் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.

BFSI – மணிப்பால் அகாடமியின் வாடிக்கையாளர்களுக்காக வங்கித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்த ஆசிரியர்களால், இளம் வங்கியர்களை, வங்கிக் கிளைகளில் சேர்ந்த முதல் நாள், முதல் மணி நேரத்திலிருந்தே செயல் திறன் மிக்கவர்களாக செயல்பட, தயாப்படுத்தும் வகையில், இந்த ’JOB READY’ பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் தங்கள் BFSI தொழில் பயணத்தில் வெற்றி பெற தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள இத்திட்டம் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிபுணர்களின் விரிவுரைகள் e-learning தொகுப்புகள், மாதிரி கிளை செயல்முறைகள் கேஸ் ஆய்வுகள், களப்பார்வை, FINACLE பயிற்சி, மற்றும் தொழில் வல்லுனர்களால் நடத்தப்படும் அமர்வுகள் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியில் 3 மாத இன்டர்ஷிப் வழங்கப்படுகிறது. அங்கு நிகழ் நேரத்தில் அவர்களது வேலைத்திறனை ஆராய்வதுடன் திறம்பட உயர்த்திக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பங்கேற்பாளர் மணிபால் அகாடமியின் நிபுணத்துவம்மிக்க, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சியின் மேலாண்மையை உறுதி செய்கிறார்கள்.

இத்திட்டத்தில் இறுதிப் பிரிவில் ஆக்சிஸ் வங்கியில், பணி இடத்திலேயே பயிற்சியை உள்ளடக்கியதுடன் இது ஒரு கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் குழு ஆதரவுடன் தனி நபரானவர் எதிர்பார்ப்புகளுக்க்கேற்ப பொருந்திப் போவதை உறுதி செய்கிறது.

மேலும் தகவல், தகுதி, மற்றும் சேர்க்கை விபரங்களுக்கு, AXIS BANK YOUNG BANKERS PROGRAM  இணையதளத்தில் உள்நுழையவும் அல்லது ABYB பிப்ரவரி 2022 ஐ சப்ஜெக்டாக கொண்ட கேள்விகளை
contract@axisyoungbankers.com மின்னஞ்சல் செய்யவும்.