தன்வந்திரி பீடத்தில் அமாவசை யாகத்துடன் திருமஞ்சன திருவிழா துவங்கியது
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் இன்று 04.05.2019 சனிக்கிழமை முதல் 29.05.2019 வெள்ளிக்கிழமை வரை 27 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் துவங்கியது. முதல் நாளான இன்று மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெய் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை 05.0.5.2019 ஞாயிற்றுக்கிழமை தன்வந்திரி ஹோமத்துடன் பால் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
மேலும் இன்று அமாவசையை முன்னிட்டு பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதக ரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் அமாவசை திருஷ்டி துர்கா யாகத்துடன் சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜை பிரசாதங்களுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.