Tamil

Tamilசெய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க முடிவு!

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

Read More
Tamilசெய்திகள்

தமிழ் பெயர்கள் அடங்கிய இணையப்பக்கம் தொடங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அண்ணா அறிவாலயத்தில் மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே! என்று நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளத்தில் கேட்டு இருந்தார். இந்த நிலையில், தம்பி நிதின் சிற்றரசு கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைப்பு – RAW முன்னாள் தலைவருக்கு முக்கிய பொறுப்பு

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. நேற்றைய தினம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்

Read More
Tamilசெய்திகள்

வட மாவட்டங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் பின் தங்கியுள்ளது – அன்புமணி ராமதாஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- தமிழகத்தில் மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பா.ம.க. இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் குறிப்பாக தம்பி, தங்கைகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பது ஆகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். இந்த கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் 20 மாவட்டங்கள் மிக மிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதில் 15 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதார வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடை விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Read More
Tamilசெய்திகள்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை செய்து தமிழகத்தில் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, ஊரக மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சி, சாதிய இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடி மரங்கள், கல்வெட்டு தூண்கள் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் எங்களது கட்சி கொடி மரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி மரங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Read More
Tamilசெய்திகள்

மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் நாளை சட்டசபை கூட்டம் முடிவடைகிறது

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக உயரும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை

Read More
Tamilசெய்திகள்

காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள் – மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- * மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது. * நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.

Read More
Tamilசெய்திகள்

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,”அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை” என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், ” லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Tamilசினிமா

ஆபாச காட்சிகள் விவகாரம் – ஒடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வாரந்தோறும் திரையரங்குகளில் புதுபுது திரைப்படங்கள் வருவதுப் போல். ஓடிடியிலும் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. ஓடிடி தற்பொழுது திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் அதனை பன்நாட்டு மக்களுக்கு

Read More