Tamil
தெருக்களில் நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட இளைஞர் கைது!
சென்னை தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர். ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது Read More
அரசு ஊழியர்களின் சொத்துக்கள் விவரங்களை வெளியிட முடியாது – தமிழ்நாடு தகவல் ஆணையம்
அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை… Read More
ஏப்ரல் மாதம் ரூ.2.37 லட்சம் கொடி ஜி.எஸ்.டி வரி வசூல்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலாகியுள்ளது.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதில்… Read More
சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில்… Read More
விரைவில் மதுரை மக்களை சந்திப்பேன் – த.வெ.க தலைவர் விஜய் பேட்டி
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான… Read More
தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை!
தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்… Read More
அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்
தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள்… Read More
கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப் போட்டி – கார்டினல் பியட்ரோ பரோலின் முன்னிலை
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில்… Read More
மக்களின் பேராதரவுடன் தி.மு.க.வே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: * தி.மு.க. எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை, சந்திக்காத சவால்கள் இல்லை, சாதிக்காத திட்டங்கள் இல்லை. * தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் தி.மு.க. என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். * மக்களின் பேராதரவுடன் தி.மு.க.வே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும். * திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும். * நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. * ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயக போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். * நம்முடைய உறுதியை சிறுசிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியாது. * சட்டம், ஒழுங்கு தொடர்பாக இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வுகளை பூதாகரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். * தேச பக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. * மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Read More
ஜனவரி 9 ஆம் தேதி கடலூரி தேமுதிக மாநில மாநாடு – விஜயகாந்த் பிரேமலதா அறிவிப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.… Read More