X

Tamil

பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:- அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டத்தை நிலைநாட்ட மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை சேர்த்து எந்த மாதிரியான கூட்டணி அமைத்து வந்தாலும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். ஒரு போதும் பாசிச பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா, கே.விஜயன், இதயத்துல்லா, தி.நகர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் முத்தழகன், எம்.வி.ராமசாமி, எஸ்.கே.முகமது அலி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். Read More

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 52 கோடி மக்களுக்கு ரூ.33 லட்சம் கோடி கடன் – மத்திய அமைச்சர் தகவல்

முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், "இந்த கடன் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இன்று, இந்த உதவி மூலம் மக்கள் புதிய வியாபார முயற்சிகளை தொடங்குகின்றனர். அத்துட்ன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன" என்றார். Read More

மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் வார விடுமுறை, பவுர்ணமி கிரிவலம், தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் கூடுதலாக சுமார் 1,900 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 நாட்களிலும் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 877 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். எனவே கடந்த 3 நாட்களிலும் அரசு பஸ்கள் மூலம் மொத்தம் 4.50 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னைக்கு புறப்படுகிறார்கள். ஒரே நாளில் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாக புறப்படுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் மற்றும் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பொதுமக்கள் பலர் சென்னைக்கு திரும்ப ஆம்னி பஸ்களையே நாடியுள்ளனர். இதனால் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் என்பது இல்லை. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து அதற்குள்ளாகவே பஸ்களை இயக்கி வருகிறோம். கட்டண விவரத்தை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளோம். நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் நாங்களே புகார் செய்து நடவடிக்கை எடுக்கிறோம்' என்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் செய்யும் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் விடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். Read More

நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும் – முகமது யூனுஸுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை

வங்கதேசத்தில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன்பின் அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீவா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. முகமது யூனுஸ் அரசை ஷேக் ஹசீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களிடம் வீடியோவில் உரையாற்றிய அவர், வங்கதேசத்தின் வரலாற்றை, குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவாமி லீக்கின் பங்களிப்புடன் தொடர்புடையவற்றை யூனுஸ் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, "வங்காளதேச சுதந்திர இயக்கத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்படுகின்றன. சுதந்திரப் போராளிகள் அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து மாவட்டங்களிலும் நினைவகங்களை நாங்கள் கட்டினோம், ஆனால் அவை தற்போது எரிக்கப்படுகின்றன. யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?. நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும். அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர் (யூனுஸ்), அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார். வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார். Read More

பயங்கரவாதி ராணாவை இந்தியா முழுவதும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 238… Read More

சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைக்குப் பிறகு பேசுவேன் – முதலமைச்சர் சித்தராமையா

கர்நாடகா மாநிலத்தில் ஹெச். கந்தராஜு தலைமையில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முந்தைய சித்தராமையாக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பணி முடிவடைந்தது. பின்னர் கடந்த ஆண்டு 2024ஆம் ஆண்டு கே. ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் அறிக்கை தயார் செய்தது. ஆனால் அறிக்கை இன்னும் வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகா மாநில முதல்வரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வருகிற 17ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின் இது தொடர்பாக பேசுகிறேன் என்றார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக வருகிற 17ஆம் தேதி ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்குப் பிறகு நான் இது தொடர்பாக பேசுவேன்" என்றார். கடந்த 11ஆம் தேதி சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வறிக்கையை கர்நாடக மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. Read More

திமுக துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி நியமனம்!

அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read More

ஓசூர் மாநகராட்சியை கண்டித்து 15 ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையிலும் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Read More

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More

மத்திய அமைச்சர் அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குருமூர்த்தி உடனான ஆலோசனையின்போது அமித்ஷா உடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தார். Read More