.

சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை

July 11, 2018, Chennai

Ads after article title

இன்று (புதன்) மாலை நேரத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி அடையாறு, நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, தி.


நகர், கிண்டி,  உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான வண்டலூர், பட்டமந்திரி, நந்தியம், பெருங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், ஆரணி, தச்சூர் ஆண்டார்குப்பம், பொன்னேரி பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.