.

காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டி கொலை

July 12, 2018, Chennai

Ads after article title

சென்னையை சேர்ந்த ரவுடி தனசேகர் என்பவர், காவல் நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரவுடி தனசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீசால் கைது செய்யப்பட்டார் . அதன் பின் ஜாமினில் வெளியே வந்த தனசேகர், போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்திருக்கிறார்.

சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஆள்கடத்தல், திருட்டு, கொலை முயற்சி என்று பல வழக்குகள் இவர் மீது இருக்கிறது. மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில்,  இன்று காவல் நிலையத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து அவரை கொலை செய்து இருக்கிறார்கள்.