Tamilசினிமா

நடிகை சாந்தினிக்கு 12 ஆம் தேதி திருமணம்!

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின.

மேலும் அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயசதார்த்தம் நடந்து முடிந்தது.

வருகிற 12ந் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து 16ந் தேதி சென்னையில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திருமணம் குறித்து சாந்தினி கூறியிருப்பதாவது,

நந்தாவும் நானும் 9 வருடங்களாக காதலித்து வந்தோம். சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்தோம். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *