Tamilசினிமா

நான் மோடிஜியின் ஆதரவாளர் – வைரலாகும் நடிகை சமந்தாவின் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ‘யசோதா’ என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள்

இந்நிலையில் நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் மோடிஜின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். மற்றோரு வீடியோவில், “நான் மோடியின் ஆதரவாளர். அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார் என நான் நம்புகிறேன்” என பேசியுள்ளார்.

இந்த வீடியோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா பேசிய வீடியோ. பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய போது திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது சமந்தா பேசிய விடியோவைதான் தற்போது இணையத்தில் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.