Tamilசெய்திகள்

தொழிலதிபர் அதில் அம்பானி சுவிஸ் வங்கிகளில் ரகசிய முதலீடு செய்து வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை நோட்டீஸ்

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.