Tamilசெய்திகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு வழியனுப்பு விழா – பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பாராட்டினார்

துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று பாராளுமன்ற மேல்சபையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடந்தது.

இதில் பிரதமர் மோடி, எம்.பி.க்கள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு சிறப்பாக செயல்பட்டார். அவர் கடும் உழைப்பு, விடா முயற்சி மூலம் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக கையாண்டார். பா.ஜனதா தலைவராக, எம்.பி.யாக., மத்திய அமைச்சராக, துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு செயல்பட்டுள்ளார்.

எந்த தருணத்திலும் சூழலுக்கு ஏற்ப செயல்படுவதில் திறன் படைத்தவர். இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளது. அவர் துணை ஜனாதிபதியாக இளைஞர் நலனுக்காக அதிக நேரம் ஒதுக்கியுள்ளார். அவரது பதவி காலத்தில் மேல்சபையின் செயல்பாடு 70 சதவீதம் அதிகரித்தது. எம்.பி.க்களின் வருகை அதிகரித்துள்ளது. தாய்மொழி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அவரை பாராட்டுகிறேன். மொழிகள் மீதான அவரது ஈடுபாடு அபாரமாக உள்ளது. இது அவர் சபைக்கு தலைமை தாங்கிய விதத்தில் பிரதிபலித்தது.

வெங்கையா நாயுடு சொல்வதில் ஆழமும், அர்த்தமும் இருக்கும். சுதந்திர இந்தியாவில் பிறந்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமரின் கீழ் இந்த ஆகஸ்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு மோடி பேசினார். சமீபத்தில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் தன்கார் வெற்றி பெற்றார். அவர் வருகிற 11-ந் தேதி துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.