Tamilவிளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டி – பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் 4-வது நாள் நடந்த கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர் கொள்கிறது. இந்திய அணி இறுதிப்போட்டிகு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.