Tamilசெய்திகள்

இந்திய எல்லைப் பகுதியில் பறந்த டிரோன் மீது துப்பாக்கி சூடு

ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 9.35 மணி அளவில் அது ஒளிர்ந்த படி பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த டிரோன் தூள் தூளானது. அதன்பிறகு டிரோன் விளக்கு தென்பட வில்லை சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த டிரோனை கண்டுபிடிக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.