Tamilவிளையாட்டு

சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த சுப்மான் கில்

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஷிகர் தவானுடன் களமிறங்கிய தவான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே கொஞ்சமும் கூட பயம் இல்லாமல் பவுண்டரிக்கு பந்தை கில் விரட்டினார்.

இதனைத் தெதாடர்ந்து ஆட்டத்தின் 3-வது ஓவரில் அல்சாரி ஜோசப் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார் கில். இதனைத் தொடர்ந்து அடிக்க வேண்டிய பந்தை சுப்மான் கில் அடித்து ஆட, 36 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன்பு 3 போட்டியில் நடுவரிசையில் இறங்கி மொத்தம் 49 ரன்கள் அடித்த சுப்மான் கில், தற்போது தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்த கில் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். கில் அரை சதம் அடித்ததன் மூலம் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இளம் வயதில் அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளினார் கில். சச்சின் 24 வயதில் முதல் அரை சதம் அடித்தார். முதல் இடத்தில் விராட் கோலி 22 வயது 215 நாட்களில் அரை சதம் அடித்தார். சுப்மன் கில் 22 வயது 317 நாட்களில் அரை சதம் அடித்துள்ளார்.