Tamilவிளையாட்டு

விமர்சனங்களுக்கு ஒரே பதிவில் பதில் அளித்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை.

இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. விராட் கோலிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறவையின் இரண்டு சிறகுகள் உள்ளது, அதன் அருகில் கோலி அமர்ந்திருக்கிறார்.

சிறகுகளுக்கு மேல், ஒருவேளை நான் கீழே விழுந்தால்? என்ற கேள்வி இருக்க, அதற்கு கீழே, ஒருவேளை நீ மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா? என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் வாசகங்கள் உள்ளன.