Tamilசெய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.