சிங்கப்பூர் அதிபர், சபாநாயகர், அமைச்சர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு!
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
67 வயதான ஹலிமா அவரது பேஸ்புக் பதிவில், “லேசனா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பெரியளவில் பாதிப்பில்லை. நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இந்த வார நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
53 வயதான பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்திற்கு முன் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், “சபாநாயகர் டான் தனது பதிவில், அறிகுறிகள் லேசாக இருக்கிறது என்றும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கொரோனா தொற்றில் இருந்து பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பதற்கு தடுப்பூசி உதவிகிறது. எனவே உங்கள் முறை வரும்போது பூஸ்டர்களைப் பெறுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் டோங் (52), கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.