அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உடன் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தைக் கொண்டு கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து உங்களின் துணைக்கொண்டு அதிமுகவை பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும்.
பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.