Tamilசெய்திகள்

உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிப்பு – சீமான் கண்டனம்

உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ள சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல, சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை.

தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும் தான்! நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை இடிக்கிறீர்கள்!

வீடுகளை இடிக்கலாம். வழக்குகளைத் தொடுக்கலாம். மக்களை ஒடுக்கலாம். ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.